Trending News

மந்திரி உள்ளிட்ட மூவர் கைது

(UTV|COLOMBO)-புத்தல பகுதியில் நிதி மோடி தொடர்பில் வேட்பாளர் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றிரவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

குறித்த மூவரும் காணி உரிமம் மாற்றல் தொடர்பான விவகாரத்தில் பல இலட்சங்கள் ரூபா நிதி மோசடி செய்துள்ளனர் என கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பதுளை பகுதியை சேர்ந்தவர்கள் என்பதோடு, பிரிதொருவர் புத்தல பிரதேச சபைக்காக நடைபெற்ற உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Duminda, Weerakumara to attend SLPP rally

Mohamed Dilsad

பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்க்க எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லத் தயார்- கிழக்கு மாகாண முதலமைச்சர்

Mohamed Dilsad

Sancharaka-Poddo : NEW RELIEF PACKAGE FOR INFORMAL TOURISM SECTOR

Mohamed Dilsad

Leave a Comment