Trending News

டெங்கு நோய் ஒழிப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்

(UTV|COLOMBO)-தற்போது வறட்சியுடனான காலநிலை நிலவுவதால் டெங்கு நோய் தொடர்பிலான அவதான நிலை குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு திட்ட பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு ஒழிப்பு தொடர்பில் விசேட கவனம் செலத்தப்படவேண்டும் என்று இந்த பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

 

சமீப காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பெரும் அளவில் அதிகரித்திருந்தது.

 

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பெரும் அளவில் காணப்பட்ட கொலனாவ பிரதேசத்தில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

 

கொடிக்காவத்த முல்லேரியா பிரதேசசபை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்தப்பணியில் ஈடுப்பட்டனர்.

இப்பகுதியில் வீடுகள் திறந்த வெளிகளில் இருந்த சேதமடைந்த பொருட்களின் களஞ்சிய சாலைகள் தயாரிப்பு நிலையங்கள் உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டன.

 

டெங்கு நோய் பரவக்கூடிய சுற்றாடலை கொண்டிருந்த நபர்களுக்கெதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைவிடப்பட்ட கிணறுகளும் இதன் போது கண்டுபிடிக்கப்பட்டன.இதன் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டதுடன் இவற்றை சுத்தம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

அமல் பெரேராவின் வீடு STF இனால் சோதனைக்கு

Mohamed Dilsad

දේශබන්දු තෙන්නකෝන්ගේ නිවසේ තිබී හමුවූ දේවල් ගැන ඇමති ආනන්ද විජේපාල පාර්ලිමේන්තුවේ කියයි.

Editor O

களனிவௌி தொடரூந்து வீதிக்கு நாளை முதல் பூட்டு

Mohamed Dilsad

Leave a Comment