Trending News

ஶ்ரீலங்கன் விமான சேவையின் 4 விமான சேவைகள் இரத்து

(UTV|COLOMBO)-சிசெல்ஸ் மற்றும் மும்பாய் நோக்கி இன்றைய தினம் பயணிக்கவிருந்த தமது 4 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், மும்பைக்கு செல்லும் பயணிகள் வேறு விமானங்களின் ஊடாக பயணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமானப் பயணங்களில் தொடர்ந்தும் தாமதம் நிலவுவதாக அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தற்போது நிலவும் விமானங்களின் பயண தாமதம் குறித்தும் நெருக்கடி நிலை தொடர்பிலும் ஸ்ரீலங்கன் விமான சேவை கவலை தெரிவித்துள்ளது.

அத்துடன், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன்னதாக நிறுவன இணைத்தளத்தினுடாக அல்லது 24 மணித்தியாலம் செயற்படும் நிறுவனத்தின் மத்திய நிலையத்திற்கான 011-97331979 என்ற தொலைபேசியினுடாக தொடர்பு கொண்டு விபரங்களை அறியுமாறு கோரப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Harrelson, Costner team on Netflix’s “Highwaymen”

Mohamed Dilsad

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40வது கூட்டத் தொடர் இன்று

Mohamed Dilsad

கொழும்பு வோர்ட் பிளேஸ் வீதியும் மூடப்பட்டது

Mohamed Dilsad

Leave a Comment