Trending News

ஊனா மெக்காலேயின் இறுதிக்கிரியைகள் இன்று கொழும்பில்

(UTV|COLOMB)-மறைந்த ஐ.நா. வதிவிட ஒருங்கமைப்பாளரும் UNDP வதிவிட பிரதிநிதியான ஊனா மெக்காலேயின் இறுதிக்கிரியைகள் இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.

அவரது விருப்பத்திற்கமைய  அவருடைய இறுதிக்கிரியைகள் கொழும்பில் நடைபெறவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அலுவலகம் அறிவித்துள்ளது.

அவரது பூத்தவுடலானது இன்று (02) பி.ப 1.30 – 3.30 மணி வரை கொழுப்பு 08ல் அமைந்துள்ள ஜயரத்ன இறுதிக்கிரிகை மண்டபத்தில் வைக்கப்பட்டு பின்னர் பி.ப. 4 மணிக்கு பொரளை புதிய தகனச்சாலையில் தகனம் செய்யப்படும்.

இறுதிக்கிரியை நிகழ்வில், ஐ.நா. பொதுச் செயலாளரை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும், UNDP சார்பாகவும், ஊனா மெக்காலே அவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளும் பொருட்டு ஐ.நா. உதவிப் பொதுச் செயலாளர் ஹயோலியாங் சு (Haoliang Xu) பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

பலத்த காற்று காரணமாக 17,000 வீடுகளுக்கான மின்சார விநியோகம் துண்டிப்பு

Mohamed Dilsad

Six Maldivians arrested in Sri Lanka – report

Mohamed Dilsad

Democrats challenge Trump son-in-law job

Mohamed Dilsad

Leave a Comment