Trending News

சிறுமி ஒருவரை காணவில்லை…!!!

(UTV|COLOMBO)-காலி – கிதுலம்பிடிய பிரதேச சிறுவர் இல்லத்தில் இருந்த சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

ஹூங்கம பிரதேசத்தினை சேர்ந்த 13 வயதுடைய சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

குறித்த சிறுமி கடந்த 2016 ஆம் ஆண்டு தந்தையினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கமைய கிதுலம்பிடிய சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 16 ஆம் திகதி கிதுலம்பிடிய சிறுவர் இல்லத்தில் இருந்து பாடசாலை சென்று மீண்டும் சிறுவர் இல்லத்திற்கு திரும்பாத காரணமாக காலி காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய காலி காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Related posts

மழையுடன் கூடிய காலநிலை நாளை முதல் அதிகரிக்கும்

Mohamed Dilsad

நாலக சில்வாவின் உத்தியோகபூர்வ அறைக்குச் சீல்…

Mohamed Dilsad

விடுதலைப்புலிகள் தலைவராக பாபிசிம்ஹா…

Mohamed Dilsad

Leave a Comment