Trending News

காலநிலையில் மாற்றம்

(UTV|COLOMBO)-நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை இன்றிலிருந்து எதிர்வரும் 8 ஆம் திகதி வரை தற்காலிகமாக குறையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் கடற்கரையோரப் பகுதிகளில் காலைவேளையில் ஓரளவு மழை எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் சில பகுதிகளில் காலைவேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும்.

கல்முனையிலிருந்து ஹம்பாந்தோட்டை, காலி ஊடாக கொழும்பு வரையான கரையோரப்பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Thai Pongal shows us the value of sustainability – PM

Mohamed Dilsad

ஜனாதிபதி பிரதமருக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு

Mohamed Dilsad

Rahul Dravid bats for alternate careers for young cricketers

Mohamed Dilsad

Leave a Comment