Trending News

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டு ஒருவர் பலி

(UTV|KILINOCHCHI)-கிளிநொச்சி பரந்தன் பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டு ஒருவர் பலி என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர் குறித்த சம்பவம் இன்று (05.03.2018) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பரந்தன் புகையிரத நிலையத்தில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் உள்ள உமையாள்புரம் செல்லும் வீதியில் பாதுகாப்பற்ற கடவையை மோட்டார் சைக்கிளில்  கடந்து செல்ல முற்பட்ட வேளையில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
36 வயதான 3 பிள்ளையின் தகப்பனான கிளிநொச்சி கண்ணகியம்மன் கோவிலடி மளையாலபுரம் சேர்ந்த மாரிமுத்து நாகராசா என்ற நபரே பலியானார்
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயனித்த புகையிரதத்தில் மோதியே குறித்த நபர் விபத்துக்கு உள்ளாகி பலியானர் என்பது குறிப்பிடத்தக்க விடைமாகும்.
இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2018/03/DSC02705.jpg”]

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

නාමයෝජනා පත්‍රය ප්‍රතික්ෂේප විමට එරෙහි පෙත්සම විභාගයට ගැනීමේ තීරණය අද

Mohamed Dilsad

Mahinda refutes government’s claims on SAITM

Mohamed Dilsad

Private bus owners Federation’s special meeting today

Mohamed Dilsad

Leave a Comment