Trending News

மியன்மாரில் இடம்பெற்ற இனசுத்திகரிப்பு நடவடிக்கைகள் இன்னும் நிறுத்தப்படவில்லை –

(UTV|COLOMBO)-மியன்மாரில் இடம்பெற்ற இனசுத்திகரிப்பு நடவடிக்கைகள் இன்னும் நிறுத்தப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுசெயலாளர் ஹென்று கில்மோர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த நாட்டின் ரக்கேயின் பிராந்தியத்தில் உள்ள ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இதுவரையில் சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்யா ஏதிலிகள், பங்களாதேஸிற்கு தப்பிச் சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மியன்மாரின் படையினர் தங்களுக்கு எதிராக கொலைகள், பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பல வன்முறைகளை திணிப்பதாக தெரிவித்துள்ளனர்.

எனினும் மியன்மாரின் அரச படையினர் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்து வருகின்றனர்.

தாங்கள் ரோஹிங்யா போராளிகளுக்கு எதிராகவே தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Sri Lanka targets Saudi tourism market

Mohamed Dilsad

ஊரடங்குச்சட்டம் அமுலில்

Mohamed Dilsad

Sandra Oh, Taylor Swift among Time’s 100 most influential people

Mohamed Dilsad

Leave a Comment