Trending News

சுகாதார திணைக்களத்துடன் இணைந்த சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு

(UTV|COLOMBO)-சுகாதார திணைக்களத்துடன் இணைந்த அனைத்து சாரதிகளும் இன்று நாடுதழுவிய பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுகாதார திணைக்களத்துடன் இணைந்த சாரதிகளை வேறு திணைக்களங்களுக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அகில இலங்கை சுகாதார சாரதிகள் சங்கத்தின் தலைவர் பிரதீப் நிஷாந்தவிடம் நாம் வினவினோம்.

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களைச் ​சேரந்த சுகாதார சாரதிகளே அதிகளவில் இவ்வாறு இடமாற்றப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

9 மாகாணங்களைச் சேர்ந்த சுகாதார சாரதிகள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் நாட்டில் நிலவும் அவசரகால நிலையை கருத்திற்கொண்டு, அவசர தேவைகளுக்கு உதவிபுரிய தயாராகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

நானும் பால் அருந்துகிறேன் ஆனால் எனக்கு அது விஷமாகியதில்லை

Mohamed Dilsad

Evening thundershowers still high over Sri Lanka

Mohamed Dilsad

Lankan doctor in Australia loses appeal over manslaughter of husband

Mohamed Dilsad

Leave a Comment