(UTV|COLOMBO)-இலங்கை அரசாங்கம் நிலைமாறுகால நீதிவழங்கல் செயற்பாடுகளின் அமுலாக்கத்தை விரைவுப்படுத்த வேண்டியது அவசியம் என்று, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் செயிட் ராட் செயிட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத்தொடரில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தைக் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறுதல்கள் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் அதிருப்தி அளிக்கிறது.
இந்த விடயத்தை அரசாங்கம் விரைவுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
பொறுப்புக்கூறுதல் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதமே, அண்மைய நாட்களில் இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்களுக்கு காரணமாகவும்.
அரசாங்கமானது நிலைமாறுகால நீதிவழங்கல் பொறிமுறை அமுலாக்கத்தில் உரிய வகையில் செயற்படவில்லை என்றால், மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள், இலங்கை தொடர்பில் சர்வதேச நீதிப்பொறிமுறையை பயன்படுத்த ஊக்கமளிப்பதாகவும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், மனித உரிமைகள் ஆணையாளரது இந்த அறிக்கை, எதிர்வரும் 21ம் திகதி விரிவாக ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]