Trending News

அர்ஜுன் மகேந்திரனுக்கு வழங்கப்பட்ட காலவகாசம் நேற்றுடன் நிறைவு

(UTV|COLOMBO)-குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு, வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.

கொழும்பு – கோட்டை நீதவான் லங்கா ஜயரட்னவினால், அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக இது தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவித்தல், இன்னும் அவரிடம் கையளிக்கும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை.

அர்ஜுன் மகேந்திரன், சிங்கப்பூரில் இருக்கின்றார் எனக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, சர்வதேச பொதிச் சேவை ஊடாகவும், அதிவேக அஞ்சல் ஊடாகவும் அவருக்கான அறிவித்தலை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும், சிங்கப்பூரில் அவர் வசிக்கும் இல்லம் பூட்டப்பட்டுள்ளதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும், குறித்த அறிவித்தல் தொடர்பில், அர்ஜுன் மகேந்திரனின் தனிப்பட்ட அழைபேசிக்கும், மின்னஞ்சல் முகவரிக்கும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தகவல் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவர் தொடர்பில் எடுக்கப்படக்கூடிய அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா விளக்கமளிக்கிறார்.

அர்ஜுன் மகேந்திரன் தொடர்பில், சர்வதேச காவல்துறை ஊடாக சிவப்பு அறிவித்தல் ஒன்று பிறக்கப்படுவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்து, அவரை தம்மிடம் கையளிக்குமாறு சிங்கப்பூரிடம் கோரலாம்.

எனினும், எனினும், இரண்டு நாடுகளுக்கும் இடையில் குற்றங்கள் தொடர்பில் உடன்படிக்கை கைச்சாத்திடப் படாதாலால், சிங்கப்பூர் அவரை கையளிப்பதை தவிர்க்கலாம்.

இந்த நிலையில், தூதரகம் ஊடாக அவரை நாட்டுக்கு அழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Egypt vows forceful response after attack

Mohamed Dilsad

Ambassador Kariyawasam re-elected to the UN Committee on Migrant Workers

Mohamed Dilsad

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை

Mohamed Dilsad

Leave a Comment