Trending News

ஜப்பான் நாட்டின் பாதுகாப்பு பணிக்குழாம் தலைவர் – ஜனாதிபதி சந்திப்பு

(UTV|COLOMBO)-ஜப்பான் நாட்டின் பாதுகாப்பு பணிக்குழாம் தலைவர் அட்மிரல் Katsutoshi Kawana ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கையின் சமுத்திரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஜப்பான் கடற்படையின் உதவியைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அட்மிரல் Katsutoshi Kawana தெரிவித்தார்.

 

இலங்கையின் கடற்படைக்கு ஜப்பானின் பயிற்சி சந்தர்ப்பங்களை அதிகரித்துத்தருமாறு ஜனாதிபதி முன்வைத்த வேண்டுகோளுக்கு ஜப்பான் பாதுகாப்பு பணிக்குழாம் தலைவர் இணக்கம் தெரிவித்தார்.

 

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை ஒழித்தல், அனர்த்த நிவாரண சேவைகள் போன்ற நடவடிக்கைகளில் தேவையான தொழில்நுட்ப அறிவைப் பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

 

இலங்கை பாதுகாப்பு பணிக்குழாம் தலைவர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவும் இங்கு பிரசன்னமாயிருந்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

NZ v Sri Lanka: Jimmy Neesham smashes five sixes in 34-run over

Mohamed Dilsad

බදු ගෙවන්නන් හඳුනාගැනීමේ (ටින්) අංක ගත් අයට දැනුම්දීමක්.

Editor O

Trump to face 2020 Republican challenge

Mohamed Dilsad

Leave a Comment