Trending News

ஐ.நா அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

(UTV|COLOMBO)-இலங்கைக்கு வருகைதந்துள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் திரு. ஜெப்ரி பெல்ட்மன் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்னவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்றது.

 

இதன்போது, தேசிய நல்லிணக்க செயற்பாடுகள் உட்பட காணி விடுவிப்பு போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், நல்லிணக்க முன்னேற்ற செயற்பாடுகள் மற்றும் அதன் தற்போதைய நிலை தொடார்பாகவும் திரு. பெல்ட்மனிற்கு விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திரு. பெல்ட்மன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது செயலாளர் நாயகம் ஜெப்ரியுடன் , ஆசியா மற்றும் பசிபிக் தலைவர் திருமதி மாரி யமாஷிதா, அமெரிக்க இலங்கை ஆகிய நாடுகளுக்கான நல்லிணக்க மற்றும் அபிவிருத்தி ஆலோசகர் திருமதி கீதா சபர்வால் மற்றும் யூ எஸ் டி, டி.பி.ஏ. செயலாளர் திருமதி மாறி சாக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடந்த 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் 02 ஆம் திகதி திரு. ஜெப்ரி பெல்ட்மன் ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் பதவியை ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அமைச்சின் சிரேஷ்ட மற்றும் முப்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மட்டக்களப்பு – கல்லடியில் பெண்ணொருவரின் உடலம் மீட்பு

Mohamed Dilsad

Ananda, Musaeus clinch Green Ball titles

Mohamed Dilsad

வெலிக்கடை போராட்டத்தில் உள்ள சிறைக் கைதிகளுடன் கலந்துரையாடல் இல்லை

Mohamed Dilsad

Leave a Comment