Trending News

(UTV|COLOMBO)-தேசிய பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரவுவதை தடுப்பதற்கு குறித்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களில் நேற்று  நள்ளிரவு முதல் வைபர் வலைத்தளம் மீதான தடை நீக்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களில் நேற்று நள்ளிரவு முதல் வைபர் வலைத்தளம் மீதான தடை நீக்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து, கலகம் விளைவித்தல் மற்றும் வன்முறை என்பன வேகமாக பரவுவதைத் தடுக்க முடிந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் பாதுகாப்பை மீண்டும் வழமை நிலைக்கு கொண்டுவர முடிந்துள்ளது.

இதையடுத்து, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, சமூக விரோத மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்கள் மீதான தடையால், வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் தமது உறவினர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்ள சிரமங்களை எதிர்நோக்கியமை தொடர்பில் அரசாங்கம் கவனத்தில் எடுத்துள்ளது.

அத்துடன், வர்த்தகர்களுக்கும், இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் கடந்த தினங்களில் ஏற்பட்ட அசௌகரிய நிலை குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த விடயங்களைக் கருத்திற்கொண்டு ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக வைபர் சமூக வலைத்தளத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை நேற்று நள்ளிரவு முதல் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படாமலிருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தற்போது தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ள ஏனைய சமூக வளைத்தளங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

இந்த நிலையில், உரிய பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்த பின்னர், அந்த சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசிப்பதற்கான வாய்ப்பை ஏற்பட்டு முடியும் எனத் தாம் நம்பிக்கை கொள்வதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்தினர் மற்றும் சமூக வலைத்தள சேவை வழங்குநர்கள் மற்றும் சமூக வலைத்தள பாவனையாளர்கள் ஆகியோர் உள்ளிட்ட பிரஜைகள் அனைவரும் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என்றும் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சட்டத்தையும் சமாதானத்தையும் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக சிரமங்களை எதிர்நோக்கியவர்கள் தொடர்பில் அரசாங்கம் தமது கவலையை வெளியிடுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பேஸ்புக் நிறுவன அதிகாரிகள் குழுவொன்றுடன் எதிர்வரும் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சமூக பெரும்பாலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை சமூக வலைத்தளங்களுக்குப் பிரவேசிக்கலாம் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டமை தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் குறித்து தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

India records first bilateral series win in South Africa

Mohamed Dilsad

PNB inspects drugs using robotic equipment

Mohamed Dilsad

Esala Festival’s Maiden Kumbal Perahera In Kandy Today

Mohamed Dilsad

Leave a Comment