Trending News

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது

(UTV|COLOMBO)-பணிக்கு திரும்புமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ள போதிலும், தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டத்தை மேற்கொள்வதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு கூறியுள்ளது.

இன்று (15) பதினாறாவது நாளாகவும் தமது போராட்டம் இடம்பெறுவதாக அதன் தலைவர் எட்வட் மல்வத்தகே கூறினார்.

தொழிற்சங்க கூட்டமைப்பின் கோரிக்கைகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்காக, தற்போது பணி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களும் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நேற்று மாலை அறிவித்திருந்தது.

குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள போதிலும் பணிக்கு திரும்ப போவதில்லை என்று பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் எட்வட் மல்வத்தகே கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Indika Dissanayake wins Silver at Commonwealth Games

Mohamed Dilsad

Bangladesh cafe attack ‘mastermind’ killed in gunfight, say police

Mohamed Dilsad

ஐக்கிய தேசிய முன்னணினர் மற்றுமொரு கலைந்துரையாடல் இன்று

Mohamed Dilsad

Leave a Comment