Trending News

இணையத்தின் ஊடான கொடுக்கல் வாங்கல்களுக்காக புதிய சட்டம்

(UTV|COLOMBO)-இணையத்தின் ஊடான கொடுக்கல் வாங்கல்களுக்காக புதிய சட்ட கட்டமைப்பு முறை ஒன்றை அறிமுகப்படுத்த நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஈ-வர்த்தகம் சம்பந்தமாக இலங்கையில் தற்போதிருக்கின்ற சட்ட முறை பலவீனமானது என்பதுடன் அது சம்பந்தமாக சரியாக செயற்படக் கூடிய ஒழுங்குமுறை கட்டமைப்பொன்று இல்லாமை பிரச்சினைக்குறியது என்று நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை கூறியுள்ளது.

இதன்காரணமாக சர்வதேச வர்த்தக மத்திய நிலையத்துடன் இணைந்து ஈ-வர்த்தகம் சம்பந்தமாக புதிய சட்ட கட்டமைப்பு முறை ஒன்றை வகுப்பதற்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை பேச்சுவார்த்தை ஒன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

அரச நிறுவனங்கள், பொது மக்கள் மற்றும் தனியார் துறை ஆகியவற்றின் பங்களிப்புடன் இன்றும் (15) நாளையும் கொழும்பில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளது.

தற்போது நாட்டின் சனத்தொகையில் 33 வீதமானோர் இணையப் பயன்பாட்டாளர்கள் என்பதுடன், 25 முதல் 34 வயதுக்கு இடைப்பட்டோர் அதில் அதிகமானவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நயன்தாராவின் குழந்தை ஆசை

Mohamed Dilsad

கே.டி லால்காந்தவுக்கு விளக்கமறியல்…

Mohamed Dilsad

Postal voting from tomorrow to Nov. 7

Mohamed Dilsad

Leave a Comment