Trending News

தம்பியை துஷ்பிரயோகம் செய்த அண்ணன் கைது

(UTV|COLOMBO)-தனது இளைய சகோதரனை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 17 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வனாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

வனாத்தவில்லு, பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் வசிக்கும் 10 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 14ம் திகதி வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில் சந்தேகநபரால் தனது சகோதரனுக்கு இந்த குற்றம் இழைக்கப்பட்டிருப்பதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துஷ்பிரயோகத்திற்கு ஆளான சிறுவன் வைத்திய பரிசோதனைகளுக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

வனாத்தவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Mexico bar attack leaves 25 dead

Mohamed Dilsad

No evidence to back allegations against Dr. Shafi – CID

Mohamed Dilsad

உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் நிறைவு

Mohamed Dilsad

Leave a Comment