Trending News

2018 ஆம் ஆண்டிற்கான சிலிம் நீல்சென் மக்கள் விருது லங்கா சதோசவிற்கு…

(UTV|COLOMBO)-நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் வறட்சி போன்ற சூழ்நிலைகளின் போது அத்தியாவசிய பொருட்களின் விலையை நிர்ணயிப்பது சதோச விற்பனை முகவர்நிலையமாகவுள்ளது.

மக்களின் சேவைக்காக இந்த விசேட விருது தெரிவுக்குழுவினால் சதோச
நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

சதோச நிறுவனம் 2018 ஆம் ஆண்டிற்கான முதன்மையான சில்லறை வர்த்தக
குறியீடாக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடுகின்றது.

கடந்த 69 வருடகால பயணத்தில் தம்முடன் இணைந்து பயணித்த வாடிக்கையாளர்கள் ஊழியர்கள் மற்றும் வழங்குனர்களுக்கு தாம் நன்றி தெரிவிப்பதாக சதோச நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

அதேவேளை கடந்த 12 வருடங்களாக தொடர்ச்சியாக இதுபோன்ற சிறப்பான நிகழ்வுகளை நடத்திவரும் சிலிம் நீல்சனுக்கு நன்றி தெரிவித்தார். அதேபோல்
வழிகாட்டுதலிலும் ஆதரவினையும் வழங்கிய அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு தனது விசேட நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

இந்த விருது பொதுமக்களிடத்தில் தமது சேவைகளைத் தொடர உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

No scheduled visit to India by President in the near future

Mohamed Dilsad

Train services come to a halt on main line and Kelani Valley line

Mohamed Dilsad

“டேவிட் பெக்காம்” கார் ஓட்டத் தடை!

Mohamed Dilsad

Leave a Comment