Trending News

இலங்கை கல்வி வரலாற்றில் முதற் தடவையாக தரம் 01 தரம் 02 மாணவர்களுக்கு ஆங்கில பாட புத்தம் அறிமுகம்

(UTV|COLOMBO)-இலங்கையின் கல்வி கொள்கைக்கு அமைய இது வரை காலப்பகுதியில் பாடசாலையில் பாட திட்டத்தில் ஆங்கில கல்வியானது தரம் 03 இல் இருந்தே ஆரம்பமானது. தற்போது இப்பாட திட்டம் தரம் ஒன்றில் இருந்து ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையின் கல்வி அமைச்சு மேற் கொண்டு மகரகம தேசிய கல்வியற் நிறுவகம் அதனை இன்று (15.03.2018) முதல் அறிமுகம் செய்து அதற்கான பாட புத்தகமும் இருவட்டும்  வெளியிட்டு உள்ளது. இந்த பாட திட்டத்தில் கதைகள் வரைதல் ஆடல்  பாடல்கள் பேசுதல் கதைத்தல் செயற்பாடுகள் அதற்கான உபகரண பாவிப்பு ஆகியன உள்ளடக்கபட்டுள்ளதுடன். வகுப்பறை செயற்பாடுகள் போன்றனவும் உள்ளடக்கபட்டுள்ளன.
இதனை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று (15.03.2018)   மீபே தேசிய கல்வி நிறுவகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்  அதிதிகளாக கலந்துக் கொண்டு பாட புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்தனர் இந் நிகழ்வில் கவ்வி அமைச்சின் செயளாலர் சுனில் ஹெட்டியாராச்சி தேசிய கல்வி நிறுவகத்தின் பனிப்பாளர் நாயகம் உட்பட கல்வி அமைச்சின் அதிகாரிகள் தேசிய கல்வி நிறுவகத்தின் உயர் அதிகதரிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Ben Stokes to join squad in New Zealand

Mohamed Dilsad

பெங்கிரிவத்த சுதா கைது…

Mohamed Dilsad

மருத்துவ பீடத்தின் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

Mohamed Dilsad

Leave a Comment