Trending News

கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்

(UTV|INDIA)-மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜானவி ‘தடக்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி நடித்து வருகிறார். தொடர்ந்து ஷாருக்கான் மகள் சுகானாவும் கதாநாயகியாகிறார். இவருக்கு 17 வயது ஆகிறது. கல்லூரியில் படிப்பதுடன் மாடலிங்கும் செய்து வருகிறார். நடிப்பு, நடன பயற்சிகளும் பெறுகிறார்.

சுகானாவுக்கு நடிகையாக ஆசை வந்துள்ளதாகவும் இதற்காக தந்தை ஷாருக்கான் மூலம் கதை கேட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஷாருக்கான் நிருபர்களிடம் கூறும்போது “சுகானாவுக்கு சினிமாவில் நடிக்க ஆசை உள்ளது. நடிப்பதற்கான திறமையும் தோற்றமும் அவளுக்கு உள்ளது. முதலில் படிப்பை முடித்து விட்டு அதன்பிறகு மற்ற விஷயங்கள் குறித்து யோசிக்கும்படி நான் அறிவுரை கூறியிருக்கிறேன்” என்றார்.

இயக்குனர்கள் பலர் சுகானாவை கதாநாயகியாக நடிக்க வைக்க கதைகளுடன் ஷாருக்கானை அணுகி வருகிறார்கள். அதில் ஒரு படத்தில் சுகானா தற்போது ஒப்பந்தம்  செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு

Mohamed Dilsad

ஹிக்கடுவயில் துப்பாக்கி பிரயோகம்

Mohamed Dilsad

கொட்டகலை த.ம.வி மாணவிகள் இருவர் 9 எ பெற்று சிறப்பு சித்தி பெற்றுள்ளனர்

Mohamed Dilsad

Leave a Comment