Trending News

உலகில் மகிழ்ச்சியான நாடுகளில் இலங்கை முன்னேற்றம்

(UTV|COLOMBO)-உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் 156 நாடுகள் பட்டியலிடப்பட்டன.

அதன்படி இதில் பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளதுடன், நோர்வே, டென்மார்க் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு 120வது இடத்தில் இருந்த இலங்கை இம்முறை நான்கு இடங்கள் முன்னேறி 116ஆவது இடத்தில் உள்ளது.

இதில் இந்தியாவை விட இலங்கை முன்னேற்றகரமான நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி, தனிநபர் வருமானம், சமூக உதவிகள், ஆரோக்கியமான வாழ்க்கை, சிறுவர் பாதுகாப்பு, சமூக சுதந்திரம், நன்கொடை வழங்கும் தன்மை, ஊழல் இல்லாத நிலை உள்ளிட்ட பல விடயங்கள் இதில் முக்கியத்துவம் பெறுகின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Special PHI team to inspect foods

Mohamed Dilsad

வெற்றிப்பாதையை நோக்கி மக்கள் காங்கிரஸ்!

Mohamed Dilsad

எதிர்க் கட்சி தலைவரின் புனித நோன்புப் பெருநாள் செய்தி

Mohamed Dilsad

Leave a Comment