Trending News

தவறாக நடக்க முயன்ற கதாநாயகனை ஓங்கி அறைந்த ராதிகா

(UTV|INDIA)-ராதிகா ஆப்தே சர்ச்சைக்குரிய கருத்துகளை துணிச்சலாக பேசி வருகிறார். திரையுலகில் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லைகள் இருக்கிறது என்று கூறினார். நடிக்க வாய்ப்பு தேடும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது என்றும் குறை கூறினார். இவர் கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தார். டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

தெலுங்கில் லெஜண்ட், லயன், ரத்த சரித்திரம் ஆகியவை ராதிகா ஆப்தே நடித்து வெற்றிகரமாக ஓடிய படங்கள். தற்போது இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். அரை குறை ஆடையில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். கவர்ச்சியாக நடிப்பது தவறு இல்லை என்றும், கதைக்கு தேவை என்றால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

ராதிகா ஆப்தேவுக்கும், லண்டனை சேர்ந்த பெனடிக் டைலருக்கும் திருமணம் முடிந்துள்ளது. மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறி உள்ளனர்.

இந்த நிலையில் டெலிவிஷன் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ராதிகா ஆப்தே, தன்னிடம் தென்னிந்திய மொழி கதாநாயகன் ஒருவர் தவறாக நடக்க முயன்றதாகவும், அவரை ஓங்கி அறைந்தேன் என்றும் பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார்.

இதுகுறித்து ராதிகா ஆப்தே டெலிவிஷன் நிகழ்ச்சியொன்றில் கூறியதாவது:-

“நான் சினிமாவுக்கு வந்த புதிதில் தென்னிந்திய மொழி படங்களில் அதிகமாக நடித்தேன். ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்புக்கு சென்றபோது எனக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டது. அந்த தென்னிந்திய மொழி படத்தில் என்னுடன் கதாநாயகனாக நடித்தவர் முதல் நாள் படப்பிடிப்பிலேயே எனது காலை உரசி தவறாக நடக்க முயன்றார்.

அவரது செயல் எனக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது. நான் மறு யோசனையே செய்யவில்லை. அந்த நடிகரை ஓங்கி அறைந்து விட்டேன்.

நான் நீச்சல் உடையில் இருப்பதுபோல் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் புகைப்படங்கள் குறித்து விமர்சிக்கிறார்கள். கடலுக்குள் சேலை உடுத்திக்கொண்டா குளிக்க முடியும்.”

இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

இ.போ.ச பேருந்து கட்டணங்களும் குறைக்க இணக்கம்

Mohamed Dilsad

කොළඹ නගරය, කොට්ටාව, පිළියන්දල, නුගේගොඩ අද (18) විශේෂ රථවාහන සැලැස්මක්

Editor O

பிரதமருடன் அமைச்சர் ரிஷாட் வடக்குக்கு பயணம்

Mohamed Dilsad

Leave a Comment