Trending News

மருந்து மூலிகைகளை உற்பத்தி செய்வதற்கான திட்டம்-அமைச்சர் ராஜித

(UTV|COLOMBO)-தேசிய மருந்து தயாரிப்புக்குத் தேவையான மருந்து மூலிகைகளை உற்பத்தி செய்வதற்கான திட்டமொன்று ஆரம்பிக்கப்படுமென்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் வங்கி வீதியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தின் வடமத்திய மாகாண பிரதேச அலுவலகமும், விற்பனை நிலையத்தையும் திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று முன்தினம் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில், ஆயுர்வேதத் திணைக்களத்திற்கு உட்பட்ட மூலிகைகளும் உற்பத்தி செய்யப்படவுள்ளன. மூலிகைக் கன்றுகளின் உற்பத்திக்காக அனுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு பயன்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதன் மூலம் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்கான சந்தர்ப்பங்கள் ஏற்படும் என்றும் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Security to be tightened at Colombo Port

Mohamed Dilsad

R. Kelly announces tour dates in Sri Lanka

Mohamed Dilsad

ஜனவரியில் தேசிய நல்லிணக்க வாரம்

Mohamed Dilsad

Leave a Comment