Trending News

மோடி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

(UTV|INDIA)-இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றை கொண்டு வரவுள்ளதாக தெலுங்கான மாநிலம் தெரிவித்துள்ளது.

இந்த பிரேரணை இன்றைய தினம் இந்திய நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை காலை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் இது தொடர்பாக அறிவித்தல் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு குறைந்த பட்சம் 50 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

எனவே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 50 பேர் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

ஒரு நாளுக்கு மேல் நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை?

Mohamed Dilsad

Alaphilippe wins stage 10 of Tour de France

Mohamed Dilsad

இவ்வாரம் அலுகோசு பதவிக்கான நேர்முகப்பரீட்சை…

Mohamed Dilsad

Leave a Comment