Trending News

மும்பையில் ஸ்ரேயா ரகசிய திருமணம்…

(UTV|INDIA)-தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா ‘எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன்பிறகு மழை, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்தார்.

ரஜினிகாந்த்துடன் சிவாஜி படத்தில் ஜோடியாக நடித்து பிரபலமானார். தொடர்ந்து அழகிய தமிழ் மகன், இந்திரலோகத்தில் ந.அழகப்பன், தோரணை, கந்தசாமி, குட்டி, ஜக்குபாய், உத்தமபுத்திரன், சிக்குபுக்கு, ரவுத்திரம், ராஜபாட்டை, சந்திரா, தோழா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் சில இந்தி, ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார்.

மலையாளம், தமிழில் வெற்றிபெற்ற திரிஷ்யம் இந்திப்படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக ஸ்ரேயா நடித்தார்.

இவர் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர். டெல்லியில் பட்டப்படிப்பு முடித்து மாடலிங் உலகில் புகுந்தார். மும்பையில் தங்கி இருந்து சினிமா படங்களில் நடித்துக் கொண்டு மாடலிங் செய்து வந்தார்.

ஸ்ரேயா ரஷியாவைச் சேர்ந்த ஆன்டிரே கோச்சேவ் என்ற இளைஞரை காதலித்து வந்தார்.

மிகப்பெரும் கோடீசுவரரான இவர் சிறந்த டென்னீஸ் விளையாட்டு வீரர் ஆவார். உதய்ப்பூரில் இருவரும் சந்தித்துக் கொண்ட போது நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. காதலை வெளிப்படையாகவே எல்லோரிடமும் தெரிவித்தார்.

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். மார்ச் மாதம் திருமணம் செய்வேன் என்று அறிவித்தார். ஆனால் திருமண தேதியை அறிவிக்க மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் ஸ்ரேயா – ஆன்டிரே கோச்சேவ் திருமணம் மும்பையில் கடந்த 12-ந்தேதி ரகசியமாக நடந்தது. இந்த திருமணத்தில் டென்னிஸ் வீரர் மனோஜ் பாஜ்பாய், நடிகை சபனா ஆஸ்மி மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

திருமணத்துக்கு முதல் நாள் அது தொடர்பான கொண்டாட்டங்கள் நடந்தன. மறுநாள் காலை இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்தார்.

ஸ்ரேயா ரகசிய திருமணம் பற்றிய தகவல் இன்று மும்பை சினிமா வட்டாரத்தில் பரவியது. இதுபற்றி ஸ்ரேயாவிடம் கேட்ட போது அதை அவர் உறுதி செய்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

2018 ஆம் ஆண்டில் வெசாக் நோன்மதி தினம் ஏப்ரல் மாதத்தில்

Mohamed Dilsad

பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வேண்டுகோள்…

Mohamed Dilsad

பாடசாலை இலவச பாடப்புத்தகங்கள் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களில் எந்த உண்மையும் இல்லை

Mohamed Dilsad

Leave a Comment