Trending News

நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க தயார்-அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல

(UTV|COLOMBO)-பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டால் அதனை தோற்கடிக்க தயார் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கான யோசனை ஒன்றும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து கலந்துரையாட ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்றைய தினம் ஒன்று கூடியது.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சி மறுசீரமைப்பு குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Rupert Grint recollects ‘sparks flying’ between Emma Watson and Tom Felton

Mohamed Dilsad

All Govt. schools to be closed on Nov. 15

Mohamed Dilsad

UNDP hails China’s contribution to promotion of renewable energy in Sri Lanka, Ethiopia

Mohamed Dilsad

Leave a Comment