Trending News

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி புதிய சட்டம்?

(UTV|COLOMBO)-பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை அமுலாக்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிடம் அறியப்படுத்தி இருக்கிறது.

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ரவிநாத்த ஆரியசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் 37வது அமர்வின் ஒரு அங்கமாக, இலங்கை தொடர்பான பூகோள காலக்கிரம மீளாய்வு அறிக்கை தொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றது.

இதில் உரையாற்றிய ரவிநாத்த ஆரியசிங்க, புதிய தீவிரவாத முறியடிப்பு சட்டத்தின் வரைவிற்கான பணிகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டார்.

சர்வதேச தரத்திற்கும், மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் உட்பட்டதாக இந்த சட்டம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

குறித்த வரைவானது தமிழ் மற்றும்சிங்கள மொழிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டதன் பின்னர், நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்காக வர்த்தமானியில் அறிவிக்கப்படும்.

அதேநேரம், கடந்த மார்ச் மாதம் 6ம் திகதி, நட்டயீட்டை வழங்கும் அலுவலகத்தை அமைப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கான சட்டமூலமும் மொழிப்பெயர்ப்பின் பின்னர் வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளது.

மேலும் இலங்கையானது, ஐக்கிய நாடுகள் சபையுடன் வினைத்திறனுடன் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கண்டியில் சிறுபான்மை சமுகத்துக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலும் அவர் தெளிவுப்படுத்தலை மேற்கொண்டார்.

ஜனநாயகமான நாட்டில் ஒருசில குழுக்களும், தனிநபர்களும் இவ்வாறான வன்முறைகளில் ஈடுபடுவதாகவும், அவர்களுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரவிநாத்த ஆரியசிங்க உறுதியளித்துள்ளார்.

மேலும் கண்டியில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டயீட்டை வழங்கும் நடவடிக்கைகளும் இடம்பெறுவதாக என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Indian Customs Officials detain Sri Lankan woman, two others

Mohamed Dilsad

Edgar Ramirez in talks for “American Crime”

Mohamed Dilsad

Price of 92 Octane Petrol increased

Mohamed Dilsad

Leave a Comment