Trending News

புதிய உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அமைக்கும் நடவடிக்கை இன்றுமுதல்

(UTV|COLOMBO)-புதிய உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார நிர்வாக நடவடிக்கைகள் இன்று (20) ஆரம்பமாக உள்ளது.

இன்றைய தினத்தில் இருந்து ஒரு மாத காலத்தில் உள்ளூராட்சி மன்றங்களை அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி 10ம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகளுக்கு அமைவாக அரசியல் கட்சிகளுக்கு சபைகளை அமைக்க முடியும்.

எவ்வாறாயினும் 50 வீதத்திற்கு அதிகமான அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளாத சபைகளில் ஆட்சியமைப்பதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர்களுக்கு அந்த இரகசிய வாக்கெடுப்பை நடத்துவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

தேர்தல் நடத்தப்பட்ட 340 சபைகளில் 169 சபைகளுக்கு இரகசிய வாக்கெடுப்பு நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொண்ட சபைகளுக்கு தலைவர்கள் மற்றும் உப தலைவர்களை நியமிக்கும் நடவடிக்கை நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலைவயில் இடம்பெற்றது.

அலரி மாளிகையில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது கொழும்பு மாநகர மேயராக ரோசி சேனாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதுடன், உதவி மேயராக மொஹமட் துல்பா மொஹமட் இக்பால் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

திங்களன்று சில பாடசாலைகளுக்கு விடுமுறை

Mohamed Dilsad

Gal Gadot joins “Death on the Nile”

Mohamed Dilsad

“Traffic congestion is the cause for vehicle tax hike,” Minister Kabir Hashim says

Mohamed Dilsad

Leave a Comment