Trending News

பாகிஸ்தான் – இலங்கை மகளிர் கிரிக்கட் அணி ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-பாகிஸ்தான் மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் சுற்றுத்தொடரின் முதலாவது போட்டி இன்று ஆரம்பமானது.

ரன்கிரி தம்புள்ள மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது.

இரு அணிகளும் மொத்தமாக மூன்று போட்டிகளில் மோதவுள்ளன. இவை மூன்றும் தம்புள்ள சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளன. இலங்கை மகளிர் அணிக்கு சமரி அத்தப்பத்து தலைமை தாங்குகின்றார்.

இம்முறை துடிப்பு மிக்க இளம் யுவதிகள் அடங்கிய அணி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் ஹேமந்த தேவப்பிரிய தெரிவித்தார்.

இலங்கை, பாகிஸ்தானிய மகளிர் அணிகள் T-20 போட்டிகள் மூன்றிலும் மோதவுள்ளன. இந்தப் போட்டிகள் கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Two cops assaulted in Kalpitiya

Mohamed Dilsad

Spain festival collapse in Vigo injures dozens

Mohamed Dilsad

හෙද නිලධාරීන්, ආණ්ඩුවට එරෙහිව විරෝධතා අරඹති.

Editor O

Leave a Comment