Trending News

சிரியாவில் வான்வழி தாக்குதலில் 17 பேர் பலி

(UTV|SYRIA)-சிரியா நாட்டில் 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் இதுவரை அங்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிப்பதில் ரஷ்யாவும் இணைந்து செயல்படுகிறது. இதுபோன்ற தாக்குதல்களில் சில சமயம் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிரியாவின் அர்பின் பகுதியில் உள்ள ஒரு பள்ளியை குறிவைத்து சில விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 2 பெண்கள், 15 குழந்தைகள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டதாக என சிரியாவில் செயல்பட்டுவரும் பிரட்டனை சேர்ந்த மனித உரிமைகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த தாக்குதலில் 50 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தாக்குதல் குறித்து சிரியா அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

கடந்த 17-ம் தேதி சிரியா நாட்டின் கிழக்கு பகுதியில் ரஷ்ய படையினர் நடத்திய விமானப் படை தாக்குதலில் 12 பேரும், துருக்கி படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 9 பேரும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பேராதெனிய பொறியியல் பீடமானது தற்காலிகமாக மூடப்பட்டது

Mohamed Dilsad

மழையுடனான வானிலை எதிர்வரும் சில தினங்களில் அதிகரிக்கலாம்…

Mohamed Dilsad

Coach disappointed with World Cup performance

Mohamed Dilsad

Leave a Comment