Trending News

பேஸ்புக் தொடர்பில் விசாரணை

(UTV|AMERICA)-அமெரிக்க செனட் சபை, பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றங்கள் பேஸ்புக் நிறுவுனர் Mark Zuckerberg ஐ விசாரணைகளுக்காக அழைத்துள்ளது.

2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்த Cambridge Analytica நிறுவனத்தினால் 50 மில்லியன் மக்களின் பிரத்தியேக தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து பேஸ்புக் நிறுவனம் மீது இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமெரிக்க கூட்டாட்சி வர்த்தக ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Cambridge Analytica நிறுவனத்தின் தலைவர் Alexander Nix தற்போது பதவிநீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மத்தேகொட

Mohamed Dilsad

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லப் பிரேரணை மீதான விவாதம் இன்று

Mohamed Dilsad

Organisation of Islamic Cooperation expresses concern over attacks against Muslims in Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment