Trending News

மட்டக்களப்பு மாவட்டத்தில் 61280 ஏக்கரில் சிறுபோகச் செய்கை

(UTV|BATTICALOA)-மட்டக்களப்பு மாவட்டத்தில் 2018 ஆண்டுக்கான சிறுபோகச் செய்கை 61280 ஏக்கரில் மேற்கொள்ளப்படவுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற விவசாய ஆரம்பக் கூட்டங்களின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதில், பெரிய நீர்ப்பாசனத்திட்டங்களின் கீழ் 51944 ஏக்கரும், சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களின் கீழ் 9336 ஏக்கரிலும் பயிற்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

சிறுபோகச் செய்கைக்கான திட்டமுகாமைத்துவக் கூட்டங்கள் விவசாய அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற்று மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழுக் கூட்டத்தினையடுத்து பிரதேச செயலக ரீதியாக ஆரம்பகூட்டங்கள் நடத்தப்பட்டு முடிவுகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், போரதீவுப்பற்று – நவகிரி, தும்பங்கேணி, சிறு நீர்ப்பாசனத்திட்டங்களின் கீழ் உள்ள 12770 ஏக்கரில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

மணிக்கு மண்முனை தென்மேற்கு – கடுக்காமுனை, புழுக்குணாவி, அடைச்சகல், சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களின் கீழ் 4130 ஏக்கர் செய்கை இடம்பெறவுள்ளது.

மண்முனை மேற்கு உன்னிச்சை, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான தீர்மானத்தின் படி அப்பிரிவுகளில் 12390 ஏக்கரில் பயிற்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள உறுகாமம், கித்துள்வௌ, வெலிகாகண்டி, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான தீர்மானத்தின்படி 11263 ஏக்கரிலும் இம்முறை விவசாயச் செய்கை நடைபெறும்.

கோரளைப்பற்று வடக்கு – கட்டுமுறிவு நீர்ப்பாசனம், மதுரங்கேணி, கிரிமிச்சை, சிறு நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழ் 2134 ஏக்கரிலும், கோரளைப்பற்று தெற்கு வாகனேரி, புணானை, தரவை, வடமுனை, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களின் கீழுள்ள நீர்ப்பாசனக்காணிகளில் 18585 ஏக்கரில் இம்முறை விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை

Mohamed Dilsad

தினமும் 20 லிட்டர் தண்ணீர் குடிக்கும் ஜெர்மனி கட்டிடகலை நிபுணர்

Mohamed Dilsad

ஜனாதிபதி நாளை நேபாளத்திற்கு விஜயம்

Mohamed Dilsad

Leave a Comment