Trending News

ஜனாதிபதியின் அதிரடி தடை

(UTV|COLOMBO)-முத்துராஜவல பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற நிர்மாணப் பணிகள் உள்ளிட்ட சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான அனைத்து செயற்பாடுகளையும் உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார்.

அங்கு நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்கான அனுமதி அரச நிறுவனங்களினால் வழங்கப்பட்டிருந்தால் அவற்றையும் இரத்து செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன் இதுபோன்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் திட்டங்களுக்கு அனுசரனை வழங்கும் மற்றும் வழங்கிய அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி உரிய துறைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

இன்ற காலை முத்துராஜவல பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, பிரதேசத்தில் அரசியல் உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருடன் விஷேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அதன் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ரயில் சேவைகளில் தாமதம்

Mohamed Dilsad

கொழும்பு பாதுகாப்பு மாநாடு இன்று ஆரம்பம்

Mohamed Dilsad

Arjuna comments on uncertain future of Galle Cricket Stadium

Mohamed Dilsad

Leave a Comment