Trending News

மண்ணெண்ணெய் பாவனை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-கடந்த வருடம் மண்ணெண்ணெய் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய கடந்த வருடம் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 90 கிலோ லீற்றர் மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு நிவாரண அடிப்படையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்று 44 ரூபாவிற்கு தற்போது வழங்கப்படுவதுடன் லீற்றர் ஒன்றினால் கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு 48 ரூபாய் நட்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த வருடம் மாத்திரம் மண்ணெண்ணெய் விற்பனையால் அரசாங்கத்துக்கு 5.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

மானிய அடிப்படையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் பேரூந்து, மற்றும் பாரவூர்தி ஆகியவற்றிற்கு விற்பனை செய்யப்படும் வர்த்தகம் தொடர்பில் கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின.

எவ்வாறாயினும், கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய கனிய எண்ணெய் வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மண்ணெண்னை கலந்து விற்பனை செய்யப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டால் அதன் அனுமதிபத்திரம் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.

இதற்கான அமைச்சரவை அங்கிகாரம் கிடைக்க பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Dam breach in Myanmar floods 85 villages, displacing thousands

Mohamed Dilsad

Showery condition will further enhance – Met. Dept.

Mohamed Dilsad

ගිය මැතිවරණයේදී වෙච්ච සියලු පොරොන්දු ඉෂ්ට කරලා තියෙන්නේ – ඇමති රාජිත

Mohamed Dilsad

Leave a Comment