Trending News

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்ட அமைச்சர்கள் தொடர்பில் தீர்மானம்

(UTV|COLOMBO)-பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்ட அமைச்சர்கள் தொடர்பில் ஐ தே கட்சி தீர்மானிக்கவுள்ளது.

அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை குழப்புகின்றவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.

ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலரும் கைச்சாத்திட்டுள்ளனர்.

அவ்வாறானவர்கள் அரசாங்கத்தில் இருந்து கொண்டே அரசாங்கத்தின் நடவடிக்கைகளை குழப்பும் வகையில் செயற்பட்டிருக்கின்றனர்.

அவர்கள் தொடர்பில் விரைவில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், எதிர்வரும் மே மாதத்திற்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான பதவிகளில் மாற்றம் ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காலப்பகுதிக்குள் ஐக்கிய தேசிய கட்சியின் அதிகாரிகளது பதவிகள் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை மக்கள் காண முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Watch the first trailer for “Black Panther”

Mohamed Dilsad

Arrest warrant on Galagoda Aththe Gnanasara Thero

Mohamed Dilsad

Man arrested with heroin worth Rs.5 million

Mohamed Dilsad

Leave a Comment