Trending News

பாகிஸ்தானின் குடியரசு தினம் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதி

(UTV|COLOMBO)-பாகிஸ்தானின் குடியரசு தினம் இன்றாகும். இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.

 

நேற்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்; விமான நிலையத்தில் தரையிறங்கிய ஜனாதிபதி தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவிற்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

நூக்கான் விமானப்படை விமானத்தில் தரையிறங்கிய ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழுவை பாகிஸ்தான் ஜனாதிபதி மம்மூன் ஹுசைன் தலைமையிலான உயர்மட்ட ராஜதந்திரிகள் வரவேற்றார்கள். இங்கு ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் சமுதித சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதியின் பாகிஸ்தான் விஜயத்தில் உயர்மட்ட சந்திப்புக்களும் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தான் ஜனாதிபதி மம்நூன் ஹூசைன், பிரதம மந்திரி ஷஹீட் அபாசி ஆகியோருடனும் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்துவார். இருதரப்பு வர்த்தக, பொருளாதார, கல்வித்துறை உறவுகளை மென்மேலும் வலுப்படுத்துவது பற்றி விசேட கவனம் செலுத்தப்படும். கல்வி, சுற்றுலா துறைகள் சார்ந்து நான்கு புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

48 hour water cut in several areas in Tangalle today

Mohamed Dilsad

நாய்களை வீதிகளில் விட்டு செல்பவர்களுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபாய் அபராதம்

Mohamed Dilsad

Bangladesh elections: Security on high alert ahead of polls

Mohamed Dilsad

Leave a Comment