Trending News

பாகிஸ்தானுக்கு புதிய ஏவுகணை கண்காணிப்பு அமைப்பை விற்பனை செய்த சீன நிறுவனம்

(UTV|PAKISTAN)-பாகிஸ்தானுக்கு ஒரு சக்திவாய்ந்த ஏவுகணை கண்காணிப்பு அமைப்பை சீனா விற்பனை செய்துள்ளது. இந்த ஏவுகணை கண்காணிப்பு அமைப்புக்கு பாகிஸ்தான் எவ்வளவு பணம் கொடுத்தது என்பது பற்றி எந்த விவரமும் கிடைக்கவில்லை . பாகிஸ்தான் ராணுவம் ஏற்கனவே துப்பாக்கிச் சூட்டில் இந்த அமைப்பை நிறுத்தியுள்ளது. இதனை புதிய ஏவுகணைகள் சோதனை மற்றும் அபிவிருத்திற்கு பயன்படுத்த உள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் ராணுவம் பல போர் ஏவுகணைகளை தயாரிப்பை வேகப்படுத்த முடியும்.

சீனா அகாடமி ஆப் சயின்சஸில் (CAS) என்னும் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு விஞ்ஞானி இந்த தகவலை வெளிப்படுத்தி உள்ளார். இதற்கு ஆதாரமாக CAS வலைத்தளத்தில் உள்ள ஒரு அறிக்கை மேற்கோள் காட்டப்பட்டு உள்ளது.

சிங்வான் மாகாணத்தில் செங்டு, ஒளியியல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் என்ற CAS நிறுவன விஞ்ஞானி ஜெங் மெங்வெய் சீனாவில் இருந்து பாகிஸ்தான் மிகவும் அதிநவீன, பெரிய அளவிலான ஆப்டிகல் கண்காணிப்பு மற்றும் அளவீட்டு முறையை பாகிஸ்தான் வாங்கியுள்ளது என மார்னிங் போஸ்ட் பத்திரிகை மூலம் உறுதிப்படுத்தி உள்ளார்.

உலகின் மிக வேகமாக சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையான பிரம்மோஸ்-ஐ இந்தியா, இன்று வெற்றிகரமான சோதனை செய்ததாக அறிவித்த பின்னர் இந்த செய்தி வெளியாகி உள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ACS Hameed: A symbol of communal harmony

Mohamed Dilsad

மாகாண சபைத் தேர்தல் செப்டம்பர் 30ம் திகதிக்கு முன்னர்

Mohamed Dilsad

Xi calls for advancing China – Sri Lanka strategic cooperative partnership

Mohamed Dilsad

Leave a Comment