Trending News

பிணையில் வந்தவர் மீது கத்திக்குத்து தாக்குதல்

(UTV|COLOMBO)-மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் கொலைக்குற்றம் ஒன்றிற்காக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து பிணையில் வெளிவந்த ஒருவர் மீது நேற்று (25) இரவு இனந்தெரியாத சிலர் கத்திக்குத்துத் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

கத்ததிக்குத்துக்கு இலக்கான நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவத்தில் படுகாயமடைந்தவர் மஜித் மாவத்தை புரத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏறாவூர் பிரதேசத்தில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு கடந்த மாதத்தில் பிணையில் வெளிவந்தவராவார்.

இவர் நேற்று (25) இரவு 8 மணியளவில் மஜித் மாவத்தை புரத்தில் தனது சகோதரியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாதவர்கள் அவர் மீது கத்தியால் குத்தி தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து படுகாயமடைந்தவர் மட்டு. போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Court issues overseas travel ban on Patali

Mohamed Dilsad

Electric Three Wheelers Manufactured In Sri Lanka By 2020

Mohamed Dilsad

Dinesh honoured in SLT SILK award

Mohamed Dilsad

Leave a Comment