Trending News

யொவுன் -புர இளைஞர் முகாம் நாளை ஆரம்பம்

(UTV|COLOMBO)-ஒன்பதாவது யொவுன்-புர இளைஞர் முகாம் நாளை ஆரம்பமாகவுள்ளது.

நிக்கவரட்டியவில் கோலாகலமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தெரிவித்துள்ளது.

‘சிறப்பான எதிர்காலம் – ஆரம்பம்’ என்னும் தொனிப்பொருளில் இவ்வாண்டுக்குரிய யொவுன்-புர இளைஞர் முகாம் நடைபெறவுள்ளது.

நாளை ஆரம்பமாகவுள்ள இந்த இளைஞர் முகாம் ஏப்ரல் மாதம் 1ம் திகதி வரை நிக்கவரட்டிய தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

செயற்றிட்ட முகாமைத்துவ இளைஞர் அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் சங்க சம்மேளனம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.

இளைஞர் முகாமின் நிறைவு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஏழாயிரம் இளைஞர் யுவதிகள் இந்த இளைஞர் முகாமில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சமுர்த்தி பயனாளிகளுக்கு புதிய கடன் திட்டம்

Mohamed Dilsad

SLCC to supply cashew nuts to SriLakan

Mohamed Dilsad

பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பளம் – அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிற்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையே சந்திப்பு…

Mohamed Dilsad

Leave a Comment