Trending News

ஏப்ரல் 1 முதல் பெட் ஸ்கானர் இயந்திரத்தின் சேவைகள் ஆரம்பம்

(UTV|COLOMBO)-இலங்கை மக்களின் நிதியுதவியில் மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட பெட் ஸ்கேனர் இயந்திரம் ஏப்ரல் முதலாம் திகதி முதல் மக்கள் சேவைக்காக ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

இந்த பெட் ஸ்கேனர் இயந்திரம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24ஆம் திகதி விமானத்தின் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. இதனை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு அடுத்தமாதம் 1ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கான நிதி பொதுமக்களிடம் சேகரிக்கப்பட்டு சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. இதன்பின்னர் அமைச்சரவை அங்கீகாரத்துடன் ஜேர்மன் சீமென்ஸ் நிறுவனத்திடமிருந்து 202 மில்லியன் ரூபா செலவில் இந்த இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டது.

இந்த இயந்திரம் மூலம் அனைத்து விதமான புற்றுநோய்களையும் அடையாளம் காண முடிவுதுடன், ஒரு மாதத்துக்கு நூற்றுக்கும் அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

350 சுகநல உணவகங்களை அமைப்பதற்கு சமுர்த்தி திணைக்களம் நடவடிக்கை

Mohamed Dilsad

UK revises travel advisory on Sri Lanka

Mohamed Dilsad

மதுரை மாணவிக்கு அமெரிக்காவில் இளம் அறிஞர் விருது

Mohamed Dilsad

Leave a Comment