Trending News

ரஜினியுடன் இணையும் த்ரிஷா மற்றும் அஞ்சலி

(UTV|INDIA)-ரஜினி நடிப்பில் ‘காலா’ படம் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரஜினி அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். விஜய் சேதுபதியும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாபாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு ஜூலையில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற கதாபாத்திரங்கள் மற்றும் மற்ற கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த படத்தில் ரஜினியுடன் நடிக்க த்ரிஷா மற்றும் அஞ்சலியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்துடன் நடிப்பது தான் தனது கனவு என்று நடிகை த்ரிஷா கூறிவருவதால், இந்த படத்தில் அவர் ஒப்பந்தமாவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமின்றி ரஜினியுடன் கோச்சடையான் படத்தில் நடித்த தீபிகா படுகோனேவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Teachers & Principals fall sick for two days

Mohamed Dilsad

ඕස්ට්‍රේලියා ක්‍රිකට් කණ්ඩායම මෙරටට පැමිණේ

Editor O

களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும்

Mohamed Dilsad

Leave a Comment