Trending News

ஏப்ரல் 26 முதல் மே 2 வரை வெசாக் வாரம்

(UTV|COLOMBO)-வெசாக் நோன்மதி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் வழிபாட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் நிமல் கொடல்வள கெதர தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் நடத்தப்படும் விசேட மதம் மற்றும் சாசன வேலைத்திட்டங்களுக்காக அரசாங்கம் 19 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.

வெசாக் நோன்மதி தினம் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

வெசாக் வாரம் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி முதல் மேமாதம் 2 ஆம் திகதி வரை இடம்பெறும்.

இம்முறை ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி பிங்கிரிய ரஜமஹா விகாரையில் அரச வெசாக் வைபவம் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

அரச வைபவத்திற்கு அமைவாக குருநாகல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறவிருப்பதாகவும் பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

பிங்கிரிய ரஜமஹா விகாரை அடங்கலாக 300 விகாரைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

எஸ்.எப் .லொக்கா கடத்திய சொகுசு ஜூப் வாகனம் மீட்பு!

Mohamed Dilsad

Bodies found in Myanmar plane search

Mohamed Dilsad

சீனாவில் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு கத்திக்குத்து

Mohamed Dilsad

Leave a Comment