Trending News

ஆனந்தசுதாகரின் விடுதலையை கோரி கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள் கருணை மகஜர்

(UTV|KILINOCHCHI)-ஆனந்தசுதாகரின் விடுதலையை கோரி கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள் கருணை மகஜர் ஒன்றை இன்று அனுப்பி வைத்தனர். இன்று காலை கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் மாணவர்கள் குறித்த கருணை மகஜரில் கையொப்பம் இட்டனர்.
ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் இருவரும் கல்வி பயிலும் கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்கள்,  அதிபர், பிரதிஅதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டடோர் இன்றய கையொப்பம் இடும் செயற்பாட்டில் ஈடுபட்டனர். இதன்புாது 2500 மேற்பட்ட கையொப்பங்கள் திரட்டப்பட்டது. நிகழ்வில் கிளிநொச்சி வலய கல்வி பணிமனையினர், இலங்கை தமிழ் ஆசிரியர் சங்க பிரிதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கம் அவர்களின் தலைமையில் கையொப்பம் பெறப்பட்ட மகஜர் இன்று இலங்கை தமிழ் ஆசிரியர் சங்க செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த கல்லூரி முதல்வர்,
ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் இருவரும் இங்கேயே கல்வி கற்கின்றனர். இவர்களின் கடந்தகால செயற்பாடுகளிற்கு மாறாக தற்போது மாணவர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. கல்வி கற்க விருப்பமற்றவர்களாக, அதிக யோசனையில் உள்ளவர்களாகவும், தனிமையை விரும்புபவர்களாகவும் இவர்கள் இருப்பதை கண்டு பாடசாலை சமூகமாகிய நாம் மிகவும் கவலை அடைகின்றோம். இவர்களின் இந்த நிலையை மாற்றுவதற்கு ஆனந்த சுதாகரை விடுதலை செய்ய சம்மந்தப்பட்டவர்களை பாடசாலை சமூகமாக வேண்டுகின்றோம் என்றார்.
கருத்து தெரிவித்த இலங்கை தமிழ் ஆசிரியர் சங்க செயலாளர் குறிப்பிடுகையில்,
இந்த மாணவர்களின் நிலை போன்று யுத்த்தில் பல்லாயிர கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இவ்வாறு மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதை நாம் வலியுறுத்துகின்றோம். இதற்காக நாம் 3 லட்சத்திற்கு அதிக கையெழுத்துக்களை கல்வி சமூகம் சார்பில் பெற்று வடமாகாண கல்வி அமைச்சு ஊடாக வடமாகாண ஆளுனர், ஐக்கியநாடுகள் சபைக்கும், கௌரவ ஜனாதிபதிக்கும் அகிம்சை வழியில் மகஜரை அனுப்ப உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இன்றைய கையொப்பம் திரட்டல் தொடர்பில் பாடசாலை மாணவி கருத்து தெரிவிக்கையில்,
இந்த சிறார்கள் தாயை இழந்து, தந்தையின் பாசத்திற்காக ஏங்கி நிற்கின்றார்கள். இந்த நிலையில் இவர்களின் தந்தையை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நாம் தயவுடன் வேண்டுகின்றோம். இவர்கள் பாடசாலையில் தனிமையை உணவர்வதை தாம் கண்டுள்ளதாகவும் அவர் இதன்போது கருத்து தெரிவித்தார்.
எஸ்.என்.நிபோஜன்

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Switzerland insists Ambassador in Sri Lanka not recalled

Mohamed Dilsad

PM underscores victory of goodness over evil

Mohamed Dilsad

SLFP Central Committee decides to expel Fowzie

Mohamed Dilsad

Leave a Comment