Trending News

சிறிலங்கா சுதந்திர கட்சியின் அதிரடி தீர்மானம்

(UTV|COLOMBO)-நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகுமாறு, சிறிலங்கா சுதந்திர கட்சி கோரவுள்ளது.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் வைத்து இதற்கான தீர்மானம் நேற்றிரவு ஏகமனதாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா இந்த தகவலை தெரிவித்தார்.

அதேநேரம், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும், ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று இன்று காலை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான இறுதிகட்ட சமரச முயற்சிகள் நடைபெறவுள்ளதாக, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தீர்மானிப்பதற்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று ஒன்று கூடவுள்ளது.

நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

அத்துடன் ஜே.வி.பி மற்றும் ஒன்றிணைந்த எதிரணி என்பனவும், நாடாளுமன்றக் கட்டிடத்தொகுதியில் பிரத்தியேக கூட்டங்களை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்டக் குழு கூட்டம் இன்று மாலை நடைபெறவிருப்பதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பேச்சாளர் ஒருவர் இதனை  தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டம் நேற்று நடைபெறவிருந்த போதும், கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் கிழக்கில் உள்ளுராட்சிசபைகள் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தமையால் அந்த கூட்டம் இடம்பெற்றிருக்கவில்லை.

இந்தநிலையில் இன்று மாலை கட்சித் தலைமையகமான தாருசலாமில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்திப்பதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Ram Sethu will not be damaged for Sethusamudram project

Mohamed Dilsad

හිටපු රාජ්‍ය අමාත්‍ය රත්වත්තේ මහතා බන්ධනාගාර රෝහලට

Editor O

Republican website trashes FBI memoir

Mohamed Dilsad

Leave a Comment