Trending News

போத்தலில் அடைக்கப்பட்ட நீரின் தரம் பற்றி ஜனாதிபதி பணிப்புரை

(UTV|COLOMBO)-போத்தலில் அடைக்கப்பட்ட நீரின் விலை அதன் தரம் பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.

நாட்டின் பல மாவட்டங்களிலும் நிலவும் வரட்சியுடன் கூடிய காலநிலையினால் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை சாதகமாகப் பயன்படுத்தி சில வர்த்தகர்கள் தரம் அற்ற போத்தலில் அடைக்கப்பட்ட நீரை கூடுதலான விலைக்கு விற்பனை செய்கின்றார்கள்.

 

வரட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றது. வரட்சியான காலநிலையினால் ஒன்பது மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சத்து 43 ஆயிரம் குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றமை தெரியவந்திருக்கின்றது.

 

பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய குடிநீர், ஏனைய வசதிகள், உலர் உணவுப் பொருட்கள் என்பனவற்றை வழங்கும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் உட்பட பல விடயங்கள் பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Sri Lanka becomes the 163rd state party to the Ottawa Mine Ban Treaty

Mohamed Dilsad

Kerosene price to be reduced from midnight tomorrow

Mohamed Dilsad

கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள்

Mohamed Dilsad

Leave a Comment