Trending News

நலின் பெர்னாண்டோ இன்று நீதிமன்றில் முன்னிலை

(UTV|COLOMBO)-விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெர்னாண்டோ இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இவர் கடந்த தினத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் , இன்றைய தினம் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

வெளிநாடு செல்ல முற்பட்ட வேளையில் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து அவர் காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவினால் கடந்த தினத்தில் கைது செய்யப்பட்டார்.

2014 ஆம் ஆண்டு இறுதி பகுதியில் அரசாங்கத்தின் 39 மில்லியன் ரூபா பணத்தை முறையற்றவிதத்தில் பயன்படுத்தியமை மற்றும் சதுரங்க அட்டைகள் கொள்வனவின் போதான நிதி முறைக்கேடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் இந்த வழங்குடன் தொடர்பு கொண்டுள்ளார் என்றதன் அடிப்படையில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்தானந்த அளுத்கமவுக்கு வெளிநாடு செல்லவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

George Weah elected Liberian president

Mohamed Dilsad

P. B. Dissanayaka appointed Central Province Governor

Mohamed Dilsad

இந்தியர் ஒருவர் இலங்கையில் கைது

Mohamed Dilsad

Leave a Comment