Trending News

ஐஸ் ஹாக்கி வீரர்கள் பலி-அஞ்சலி நிகழ்ச்சியில் ஜஸ்டின் ட்ருடாவ்

(UTV|CANADA)-கனடா நாட்டில் உள்ளூர் ஐஸ் ஹாக்கி போட்டியில் விளையாடுவதற்காக ஜுனியர் அணி வீரர்கள் நேற்று  முன்தினம் பேருந்தில் சென்றனர். சாஸ்கட்சேவான் மாகாணத்தின் திஸ்டேல் நகருக்கு அருகில் சென்றபோது எதிரே வந்த டிரக்குடன் மோதியது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

பேருந்து விபத்தில் சிக்கி ஐஸ் ஹாக்கி வீரர்கள் 15 பேர் பலியானதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விபத்தில் பலியான ஐஸ் ஹாக்கி வீரர்களின் அஞ்சலி நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடாவ் மற்றும் முன்னாள் ஹாக்கி வீரர்கள் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், விபத்தில் பலியான ஐஸ் ஹாக்கி வீரர்களுக்கு பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், ஹாக்கி வீரர்களுக்கு நடக்கவுள்ள அஞ்சலி நிகழ்ச்சியில் பிரதமர் ஜஸ்டின் ட்ருடாவ் மற்றும் முன்னாள் ஹாக்கி வீரர்கள் பலர் கலந்து கொள்கின்றனர் என தெரிவித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அனைத்துக் கட்சி மற்றும் மதத் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு

Mohamed Dilsad

இலங்கைக்கு சீன அரசாங்கம் விதித்திருந்த தடையில் தளர்வு

Mohamed Dilsad

நிகவெரட்டிய வன்முறை சம்பவம் தொடர்பில் கைதானவர்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி விளக்கமறியலில்

Mohamed Dilsad

Leave a Comment