Trending News

கூட்டு எதிர்கட்சியின் விஷேட கலந்துரையாடல் நாளை

(UTV|COLOMBO)-கூட்டு எதிர்கட்சியின் விஷேட கலந்துரையாடல் நாளை (10) நடைபெற உள்ளது.

நாளை பிற்பகல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற உள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை தொடர்ந்து கூட்டு எதிர்கட்சியினால் நடத்தப்படும் முதலாவது கலந்துரையாடல் இதுவாகும்.

எவ்வாறாயினும் இதில் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தமைக்கான காரணம் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க…

Mohamed Dilsad

இலங்கை இராணுவத்தின் புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் பதவியேற்பு

Mohamed Dilsad

Six arrested in India attempting to smuggle explosives to Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment