Trending News

சூர்யாவுக்காக லண்டன் பறந்த ஹாரிஸ் ஜெயராஜ்

(UTV|INDIA)-சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்.ஜி.கே.’, படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகிய நிலையில், இந்த படத்தில் சூர்யா ஜோடியாக யார் நடிக்க இருக்கிறார் என்பது குறித்து சமூக வலைதளங்களில் சில வதந்திகள் பரவி வருகின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், படத்திற்கு இசையமைப்பதற்காக இயக்குநர் கே.வி.ஆனந்துடன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் லண்டன் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

படத்தின் ப்ரீ ப்ரொடக்‌ஷன்ஸ் பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், என்.ஜி.கே. படப்பிடிப்பு முடிந்த பிறகு சூர்யா 37 படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஆண்டனி படத்தொகுப்பு பணிகளையும், கேவ்மிக் யு அரி ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

சப்ரகமுவ பல்கலைக்கழகம் 15 ஆம் திகதி திறப்பு

Mohamed Dilsad

மாணவ ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக நகர மண்டப வீதிகளில் கடும் வாகன நெரிசல்

Mohamed Dilsad

Ethiopia Amhara ‘coup ringleader killed’

Mohamed Dilsad

Leave a Comment