Trending News

பிரதமரை எதிர்த்த அமைச்சர்களின் அதிரடி முடிவு

(UTV|COLOMBO)-பிரதமருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை ஆதரித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சிலர் இன்று இடம்பெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தை புறக்கணிக்க உள்ளனர்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நாளை மீண்டும் கூடவுள்ளது.

அவநம்பிக்கை பிரேரணையை ஆதரித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், தமது பதவிகளில் இருந்து விலகுவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்கான கட்சியின் விசேட மத்திய குழுக் கூட்டம் நேற்றிரவு இடம்பெற்றது.

ஜனாதிபதி மாளிகையில், கட்சித் தலைவரான ஜனாதிபதி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இதேவேளை அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருடன் இணைந்து அரசாங்கத்தில் தொடர்ந்தும் செயற்பட முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க் உட்பட கட்சியின் அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியை சந்தித்தபோதே அவர்கள் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

முதலீட்டு வர்த்தகம் தொடர்பான செயலமர்வு நாளை

Mohamed Dilsad

Third school term to end on Dec. 08 – Education Ministry

Mohamed Dilsad

UPDATE-தற்போதைய பிரதமருக்கு எதிரான மனு தற்சமயம் விசாரணை

Mohamed Dilsad

Leave a Comment